ஒடிஷா மாநிலம், புரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த ஜூலை 19ஆம் தேதி பாலங்கா பகுதியில் 75% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். முதலுதவிக்குப் பின், புவனேஸ்வரில் உள்ள ஐஎம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவரை, தீவிர காயங்களால் அடுத்த நாளே டெல்லி ஐஎம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பலமுறை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுமி உயிருக்கு போராடி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக முதலில் சிறுமியின் தாயார் அளித்த புகாரில், மூன்று மர்ம நபர்கள் சிறுமியை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கெரோசின் ஊற்றி தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இது ஒரு கொடூர குற்றமாகக் கருதப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“>
ஆனால் தற்போது ஒடிஷா போலீசார் “இந்த சம்பவத்தில் வேறு யாரும் தொடர்புடையதாக தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளனர். இதனால், ஆரம்பத்தில் கூறப்பட்ட விபரங்களும் தற்போது போலீசாரின் நிலைப்பாடும் முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.
இந்த பரபரப்பில், சிறுமியின் தந்தை ஓர் உணர்ச்சிமிகுந்த காணொளி வெளியிட்டுள்ளார். அதில், “என் மகள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாள். ஏற்க முடியாத மனவெளிச்சம் தான் காரணம். இதை அரசியலாக்க வேண்டாம். அரசின் உதவிக்கு நன்றி. இனி என் மகளுக்காக அமைதி வேண்டும்” என உருக்கமாக கூறியுள்ளார். போலீசாரும் பொதுமக்கள் இந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்ட கருத்துகள் எதையும் பரப்ப வேண்டாம் என கேட்டுள்ளனர்.