ஐபிஎல் தொடங்குறதுக்கு முன்பே சென்னை உடனான தொடர்பு எனக்கு இருக்கிறது... தோனி நெகிழ்ச்சி!
Dinamaalai August 04, 2025 04:48 PM

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே சென்னையுடனான தொடர்பு எனக்கு இருக்கிறது என்றும், அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் பேட்டிங் பிரச்சினை சரியாகி விடும் என்றும் தோனி பேசியிருக்கிறார்.

முன்னதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியின் பேட்டிங் வரிசை குறித்து சற்று கவலைப்பட்டோம். ஆனால் தற்போது எங்களது பேட்டிங் வரிசையை சரி செய்துவிட்டதாக நினைக்கிறேன். ஏனெனில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்புவார். அவர் காயம் காரணமாக கடந்த சீசனில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடவில்லை. ஆனால் அவர் மீண்டும் வருவதால், எங்களுக்கு பேட்டிங்கில் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன்.

2025ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி தளர்ந்துபோய்விட்டது (கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது) என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அணியில் இருக்கும் சில ஓட்டைகளை நிரப்பவேண்டி உள்ளது. டிசம்பர் மாதம் நடக்கும் மினி ஏலத்தில் எங்களுக்கு இருக்கும் சில ஓட்டைகளை சரி செய்ய சில வீரர்களை எடுக்க உள்ளோம். கடந்த இரு சீசன்கள் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. அத்துடன் நாங்கள் எங்களது தரத்துக்கு ஏற்ப விளையாடவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதே முக்கியம். வரும் சீசனில் அணியில் உள்ள பிரச்சினைகளை சரி செய்து முழு திறமையை வெளிப்படுத்துவோம்.

சென்னை உடனான தொடர்பு எனக்கு ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே இருக்கிறது. 2005ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். அதில் இருந்து சென்னையுடனான பந்தம் தொடர்கிறது. நான் இங்கு 45-50 நாட்கள் செலவிடுவதால், சென்னை அணி நான் வளர உதவியாக இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.