அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவி சவன்னா மில்லர், ‘தி சர்க்கிள்’ சீசன் 7 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றவர். சமீபத்தில் TikTok-இல் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தன் வாழ்க்கையின் மிகவும் வலியுடனான அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
22 வயதான இந்த மாணவி, தனது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்திய டம்பன் (tampon) ஒன்றை மறந்து எடுத்து விட்டதாக நினைத்து விட்டுவிட்டார். அது வெளியே வந்துவிட்டதாக நினைத்து கவனிக்காமல் போனது. ஆனால் அதன் விளைவாக, சில நாட்களுக்குப் பிறகு அவரது உடலில் கடும் வாசனை மற்றும் அரிப்புடன் கூடிய அசௌகரியங்கள் உருவானது.
வாரங்கள் கடந்தும் பிரச்சினை தீராமல் போனதால், பலமுறை பல்கலைக்கழக மருத்துவமனைக்குச் சென்றார். ஆரம்பத்தில், மருத்தவர்கள் பாலியல் நோய்கள் (STI) மற்றும் பாக்டீரியா வஜினோசிஸ் எனத் தவறான கோணத்தில் பரிசோதனை செய்தனர், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நிலைமை நாளுக்கு நாள் மோசமாக மாறியது. பிறகு, அடுத்த மாதவிடாயின் போது புதிய டம்பன் பயன்படுத்திய போது, பழைய டம்பன் மேலும் ஆழமாக சென்று சிக்கியதால் அவரது உடலில் “இறந்த எலியின் வாசனை” போல் கடுமையான நாற்றம் வீசியதுடன், வகுப்பில் கூட அமர முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மூன்றாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுநீர் மாதிரியில் பருத்தி இழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மருத்தவர்கள் ஆழமான சோதனையில் இறங்கினர். அப்போது தான், பழைய டம்பன் இன்னும் கருப்பை வாய்க்குள் சிக்கி இருப்பது தெரியவந்தது.
அது உடனடியாக அகற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அவர் Toxic Shock Syndrome (TSS) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்படாமல் தப்பினார். இது ஒரு அரிதான மற்றும் ஆபத்தான பாக்டீரியா தொற்று, இது உடல் உறுப்புகளை பாதித்து கொல்லக்கூடிய நிலைக்கும் கொண்டு செல்லக்கூடும்.
இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, டம்பன் பயன்படுத்தும் பெண்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையாக மாறியுள்ளது. டம்பன் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு 8 மணி நேரத்துக்கும் ஒரு முறை மாற்ற வேண்டியது அவசியம் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன், வெளியே வந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியம். சவன்னா மில்லரின் அனுபவம், மற்ற பெண்கள் இதுபோன்ற பிழைகளை தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் உண்மை சம்பவமாகும்.
டம்பன் (Tampon)என்பது :
ஒரு பெண்கள் சுகாதார தயாரிப்பு, இது மாதவிடாய் (Periods) நேரத்தில் ரத்த ஓட்டத்தை உடலுக்குள் தடுத்து வைத்திருக்க பயன்படுத்தப்படும் ஒரு சிறிய, மென்மையான, பருத்தி போன்ற வடிவம் கொண்ட நுழைபடும் வகை பாதுகாப்பு உதிரி ஆகும்.