ரயில்வே ஊழியர் வீட்டில் ரூ7 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை!
Dinamaalai August 18, 2025 03:48 PM

 திருநெல்வேலி  வண்ணார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் அர்ஜுன் மகன் அசோக் குமார். 38 வயதான இவர்   நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து  வருகிறார். இவர் தற்போது நெல்லை பாளையங்கோட்டை அருகே தியாகராஜநகரை அடுத்துள்ள ராஜகோபாலபுரம் சாய்பாலாஜி கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார்.  


ஊருக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது  வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்த நிலையில் கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 10 சவரன்  தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள்  காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  


அசோக் குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று ரூ7லட்சம் மதிப்புள்ள  நகை, வெள்ளிப்பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.  இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர் 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.