தோழிகளுடன் குளிக்க சென்றதில் விபரீதம்... ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு!
Dinamaalai August 18, 2025 05:48 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விடுமுறை நாள் என்பதால் தங்களது தோழிகளுடன் சேர்ந்து ஒன்றாக குளிக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (41). இவரது மகள் சாரு நேத்ரா (13). காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேத்ரா 8ம் வகுப்பு படித்து வந்தார். நேத்ராவின் வீட்டிற்கு திருவிழாவில் உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்த நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நீலாஸ்ரீயும் (17) வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நீலாஸ்ரீ, சாரு நேத்ரா மற்றும் நேத்ராவின் தோழிகள் என 5 பேர் ஒன்றாக சேர்ந்து, குளிப்பதற்காக கீழ்மத்தூர் அருகேயுள்ள செட்டியார் வட்டம் ஏரிக்கு சென்றுள்ளனர். மாணவிகள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது, நேத்ராவும், நீலாஸ்ரீயும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உயிருக்கு போராடிய படியே கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் உடன் வந்த தோழிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

மாணவிகளின் கூச்சல் கேட்டு அங்கு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஏரிக்குள் இறங்கி 2 மாணவிகளையும் தேடினர். சிறிது நேரத்தில் நீலாஸ்யும், சாரு நேத்ராவின் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.