நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அமைச்சர் துரைமுருகனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மருத்துவர்கள் அமைச்சர் துரைமுருகனுக்கு தோல்பட்டை எலும்பில் லேசான சிராய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் லேசான காயம் காரணமாக துரைமுருகனுக்கு கையில் கட்டு போடப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?