தமிழகத்தில் நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சியின் கொடிக்கு தடை விதிக்க வேண்டும் என தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்கு தொடர்ந்தது.
ஆனால், இன்று (ஆக.18) நடைபெற்ற விசாரணையில், ஐகோர்ட் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. இரு கொடிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த நீதிமன்றம், TVK கொடி முற்றிலும் வேறுபட்டது எனவும், மஞ்சள் நிறத்தில் யானை சின்னம், வாகை மலர், 28 நட்சத்திரங்கள் ஆகியவை இருப்பதால் மக்களிடம் எந்தத் தவறும் குழப்பமும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியது. இந்தத் தீர்ப்பு விஜய் தொண்டர்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.