சீர்காழியில் பள்ளி மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி அலுவலக தொலைபேசி எண்ணுக்கு பேசிவதாக மர்ம நபர் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதேபோல் இந்து அறநிலையை துறைக்கு சொந்தமான புதன் ஸ்தலமான திருவெண்காடு சுவேதனேஸ்வரர் கோவிலுக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய மர்ப நபர் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது அடுத்து போலீசார் மாணவர்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வருகின்றனர். மேலும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவினர் பள்ளி மற்றும் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.