2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ்' அழகி போட்டியில் கலந்து கொண்ட ரஷ்யாவின் க்ஸெனிய்யா அலெக்ஸான்ட்ரோவா கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஒரு மான் உள்ளே பாய்ந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 30.
ஜூலை 5-ஆம் தேதி க்ஸெனிய்யா தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மான் எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே பாய்ந்தது. க்ஸெனிய்யா காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்ததால், அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு, அவர் கோமா நிலைக்கு சென்று, ஆகஸ்ட் 15 அன்று உயிரிழந்தார். அவரது கணவர் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
க்ஸெனிய்யா அலெக்ஸான்ட்ரோவாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை 'மிஸ் யுனிவர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.
க்ஸெனிய்யா உயிரிழப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார் என்பது தான் பெரும் சோகம்..
Edited by Siva