தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக பணியாற்றி வருபவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுவான ஆதரவு உள்ளதால், சி.பி. ராதாகிருஷ்ணன் எளிதாக வெற்றி பெறுவார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
இதனிடையே, பாராளுமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எச். ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழரொருவருக்கு ஆளுநர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களுக்கு தேசிய அரசியலில் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது.