Coolie Movie: ரஜினியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் ரஜினி முதன் முறையாக இணைந்த கூட்டணி என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் லோகேஷின் யுனிவர்ஸில் படம் வருமா என்ற ஒரு கேள்வியும் இருந்தது. ஆனால் படம் முழுக்க முழுக்க ரஜினி படமாகவே இருந்தது. பேன் இந்தியா படமாக கூலி படம் சர்வதேச அளவில் வெளியானது.
படம் வெளியாகி நான்கு நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் படம் 193 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் ஆங்காங்கே லாஜிக் மீறப்பட்டதாக படத்தை விமர்சனம் செய்தவர்கள் கூறி வந்தனர். பொதுவாகவே எல்லாவற்றையும் தத்ரூபமாக எடுத்துவிட முடியாதுதான். அதே நேரம் இதை ரசிகர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தால் அதுதான் பெரிய விமர்சனமாக பார்க்கப்படும்.
அப்படி கூலி படம் மட்டுமில்லாமல் என்னென்ன படங்களில் லாஜிக் மீறப்பட்டது என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். முதலாவதாக ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஏழாம் அறிவு. அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மாடர்ன் டிரெஸ் அணிந்து கொண்டு அடையாறு பஸ் ஸ்டாப்பில் நிற்கும் ஸ்ருதிஹாசனின் காலில் செருப்பு இருக்காது. ஏனெனில் அடுத்த காட்சியில் அவர் யானை மீது ஏறுவார். அதற்காக முன்னதாகவே அவர் செருப்பு அணியாமல் நிற்பார்.
அடுத்ததாக “தாலி கட்டிய ராசா” படத்தில் கனகா காலில் முள் குத்திவிடும். அதை பார்த்த முரளி ஓடிவருவார். அப்போது அவர் பேண்ட் அணிந்திருப்பார். ஆனால் அடுத்த காட்சியில் அவர் கட்டிய வேட்டியை கிழித்து அதை கனகா காலில் கட்டிவிடுவார். பேண்ட் அணிந்த முரளி உடனே எப்படி வேட்டியை அணிவார்? இதை போல பாட்ஷா படத்தில் ரவுடிகள் காரில் இருந்து கொண்டு லேண்ட் லைனில் பேசுவார்கள்.
பிரபலமான படமான கில்லி படத்திலும் அரையிறுதி போட்டியில் தோற்ற அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருக்கும். அஜித் நடித்த வலிமை படத்தில் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார். அவரை பார்க்க இரண்டு முறை வரும் அஜித் இரண்டு முறையும் வேறு வேறு ஹேர் ஸ்டைலில் வருவார். அதை போல வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் அம்மா அம்மா பாடலில் பாடலை பாடும் போது தனுஷ் காலில் ஷூ இருக்கும். ஆனால் அப்படியே உட்காரும் போது அந்த ஹூ இருக்காது. இப்படி பல படங்களை கூறிக் கொண்டே போகலாம்.