காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறுவதால், மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...?
Seithipunal Tamil August 19, 2025 02:48 AM

வானிலை ஆய்வு மையம், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த மண்டலமாக அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அவ்வகையில்,தென்காசி, திருநெல்வேலி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதுமட்டுமில்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம்,சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.