தமிழகத்தில் வருடா வருடம் பாட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்து காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பட்டாசு ஆலைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் தமிழக அரசு வகுத்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு கழுகுமலை காலனிப் பகுதியில் திருட்டுத்தனமாக வெடி தயாரிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கே அரசு அனுமதி, உரிமம் ஏதுமின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து சிவகாசி மீனம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ரீகன் (35), பாறைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன் (46), கழுகுமலை அருகே உள்ள துலுக்கர்பட்டி சிவகாமி நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் செல்வகுமார் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அங்கு இருந்த வெடி தயாரிக்கும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?