சமீப காலங்களாக தமிழகத்தில் திருமணமான புதுமண தம்பதியர் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணிக்கையும், விவாகரத்து பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருமணமான மூன்று மாதங்களிலேயே சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரி (30). மருத்துவரான இவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தபடியே மீனம்பாக்கத்தில் உள்ள சி.ஜி.எச்., மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதிஸ்வரன் (34) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணமான மூன்று மாதங்களிலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு எழுந்த காரணமாக யுதிஸ்வரன், மனைவியை பிரிந்து சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் பெருங்களத்தூர் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது சகோதரி முத்துலட்சுமி வீட்டிற்கு சென்ற ஜோதீஸ்வரி, அன்று மாலை வீட்டிற்கு புறப்படுகையில், லிப்டில் இருந்து கீழே இறங்காமல் மொட்டை மாடிக்கு சென்று, அங்கே தனது செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு, 12வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்காரணை போலீசார், ஜோதீஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?