Coolie Movie: கடந்த 14 ஆம் தேதி சர்வதேச அளவில் வெளியான திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படம் பிரம்மாண்ட அளவில் உருவாக்கப்பட ஒரு பேன் இந்தியா படமாக வெளியானது. ரஜினியுடன் நாகர்ஜூனா, சத்யராஜ், உப்பேந்திரா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் என ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தனர்.
ஒவ்வொரு மாநிலங்களில் இருக்கும் முக்கியமான நடிகர்கள் நடித்திருந்ததால் கூலி படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இருந்தது. அதுவும் டிரெய்லரில் படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தையும் தூண்டினார்கள். அந்தளவுக்கு டிரெய்லரில் ஒவ்வொரு கேரக்டரையும் பிரம்மாதமாக காட்டியிருந்தார் லோகேஷ். ஆனால் படத்தில் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதுதான் பலபேரின் கருத்தாக இருக்கிறது.
படம் வெளியாகி முதல் நாளிலேயே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் ரஜினி படம் என்பதால்தான் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க சென்றனர். இதற்கிடையில் அனிருத்தின் பிஜிஎம் தான் படத்திற்கு கூடுதல் ப்ளஸாக அமைந்தது.ஆனால் ரஜினி படம் என்றாலே கதையைகூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ரஜினியைத்தான் கொண்டாடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் ரஜினியையும் தாண்டி சௌபின் சாஹிரின் நடிப்பைத்தான் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இவரோடு ஸ்ருதிஹாசனும் நடிப்பில் பிரம்மாதப்படுத்திவிட்டார் என்றுதான் சொல்லி வருகிறார்கள். அந்தளவுக்கு இந்த இருவரின் கேரக்டர் படத்திற்கு கூடுதல் வலுவை சேர்த்துள்ளது. இந்த நிலையில் படத்தில் ஆர்ட் இயக்குனர் சமீபத்தில் படத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
படத்தில் பெரும்பாலும் அதாவது 80% செட் போட்டுத்தான் வேலை பார்த்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதில் ஒரு சில பேர் நாற்காலி கூட காய்லாங்கடையில் இருந்துதான் எடுத்துக் கொண்டு வந்து பயன்படுத்தியிருக்கிறோம் என்று விமர்சித்திருந்தார்கள். நீங்க போய் பார்த்தீங்களா? நாங்க காய்லாங்கடையாய் அலைஞ்சதை பார்த்தீங்களா என்று கோபமாக பேசியிருக்கிறார்.
மேலும் ஒவ்வொருவரும் அவரவர் மன நிலையில் படத்தை பார்ப்பார்கள். சில பேருக்கும் பிடிக்கும் .சில பேருக்கு பிடிக்காது. அதுக்காக யாரும் இந்தப் படத்துக்கு போயிடாதீங்கனு சொல்லக் கூடாது.போய் பார்க்கட்டுமே. பார்த்தால் ஓ இப்படியா என்றுக் கூட நினைப்பார்கள். மற்றவர்களின் கருத்தில் திணிக்காதீர்கள் என்றும் அந்த கலை இயக்குனர் சதீஷ் கூறியிருக்கிறார்,