leo vs Coolie: மாஸ் காட்டிய 'லியோ'! எத்தனை 'கூலி' வந்தாலும் தளபதிதான் கிங்..
CineReporters Tamil August 18, 2025 11:48 PM

Leo vs Coolie: கடந்த 14 ஆம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக ரிலீஸான திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உப்பேந்திரா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பேன் இந்தியா படமாக கூலி படம் ரிலீஸானது. சர்வதேச அளவில் ரிலீஸான இந்தப் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதுதான் பல பேரின் கேள்வியாகவும் இருக்கிறது .ஏனெனில் படம் ரிலீஸான முதல் நாளிலேயே கூலி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வரத் தொடங்கியது. இருந்தாலும் வசூலில் தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருக்கின்றன. ரிலீஸான முதல் நாளில் 150 கோடிக்கும் மேலாக வசூலை பெற்று பெரும் சாதனை பெற்றது.

இன்னொரு பக்கம் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த திரைப்படம் வார் 2.ஏற்கனவே இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருந்தார்கள். கூலி படத்திற்கு தமிழ் நாட்டில் 700 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. வார் 2 திரைப்படத்திற்கு 200 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன.

ஏற்கனவே டிக்கெட் முன்பதிவில் கூலி படம் 100 கோடிக்கும் மேல் வசூலை பெற்றது. இந்த நிலையில் படம் வெளியாகி 4 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் 193 கோடியை எட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக உலகளவில் கூலி படம் 300 கோடியை எட்டியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கூலி படம் ரிலீஸானதில் இருந்தே அந்தப் படத்தை லியோ படத்திற்கு இணையாக ரசிகர்கள் ஒப்பிட்டு வந்தனர்.

லியோ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை கூலி படம் முந்திவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆனால் இப்போது விஜயின் சிம்மாசன கோட்டையாக கருதப்படும் கேரளாவில் அதாவது கேரளா ரசிகர்கள் ‘உலகளவில் அதிவேகமாக 400 கோடியை எட்டிய கோலிவுட் படம் லியோ’ என லியோ படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.