செப்டம்பர் 30ம் தேதி 13வது மகளிர் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்லது. இந்த உலக கோப்பைப் போட்டி நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும் நிலையில் இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4வது முறையாகும். இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் மோத உள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவித்துள்ளது. இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன் ), ஸ்மிருதி (துணை கேப்டன்), பிரத்திகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா , ஜெமிமா, ரேணுகா, அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா , சினே ராணா.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?