அடடே..! “50 வருடங்களுக்கு முந்தைய திருமண போஸ்டர்”… முதல்வர் ஸ்டாலினின் திருமண நாளில் மனைவியுடன் வைரலான புகைப்படம்….!!!
SeithiSolai Tamil August 20, 2025 07:48 PM

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 20) தனது 50வது திருமண நாளை கொண்டாட உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின், துர்க்காவதியை 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், அவரது 50வது திருமண நாளை முன்னிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருமண அழைப்பிதழ் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் போஸ்டரில், திருமண விழா அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில், திமுக பொருளாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் என்றும், அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது உள்ளிட்ட அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.