பிரபல இந்தி திரைப்பட நடிகர் அச்சுத் போட்டார் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறப்பான பங்களிப்பு செய்த மூத்த நடிகர் அச்சுத் போட்டார், கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், தானேவில் உள்ள ஜூபிடர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்ற நிலையில், இந்தி திரையுலகினர் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இவர் திரையுலகில் 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆக்ரோஷ், அர்த் சத்யா, தேசாப், பரிந்தா, ரங்கீலா, வாஸ்தவ், ஹம் சாத்து சாத்து ஹைன், பரினீதா உட்பட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தில் கடுமையான பேராசிரியராக அவர் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சினிமாவைத் தாண்டி, பாரத் ஏக் கோஜ், பிரதான் மந்திரி, ஆஹத், வாக்லே கி துனியா உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவால் பாலிவுட் மற்றும் மராத்தி சினிமா துறையில் ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?