“காட் இன் பிராவிடன்ஸ்” என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் மக்கள் இதயங்களை வென்ற அமெரிக்காவின் ‘கருணை நிறைந்த நீதிபதி’ ஃபிராங்க் காப்ரியோ, 88வது வயதில் காலமானார்.
கணைய புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடிய நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட வீடியோவில் “என்னை உங்கள் பிரார்த்தனைகளில் நினைவில் கொள்ளுங்கள்” என கேட்டிருந்த காப்ரியோ, புதன்கிழமை அமைதியாக மறைந்தார் என்று அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
1985 முதல் 2023 வரை ரோட் தீவு மாநிலத்தின் தலைமை நகர நீதிபதியாக பணியாற்றிய காப்ரியோ, அவரது நேர்மை, இரக்கம், நகைச்சுவை மிளிரும் தீர்ப்புகளால், கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் கூட வராத பொதுமக்களையும் பரிசீலனை செய்யும் தந்தை போல் அணுகிய அவர், வழக்குகளில் குழந்தைகளை கேட்டு தீர்ப்பளித்தது, மூத்த குடிமக்களுக்குத் தளர்வுகளைக் கூறியது போன்ற தத்துவங்களை பின்பற்றி நீதியை கருணையுடன் வழங்கியவர். சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் பெரும் வைரலாக பரவியது.
டிக்டாக், யூடியூப் போன்ற தளங்களில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றவர். “அரசு அமைப்புகள் கூட மனிதநேயத்துடன் செயல்பட முடியும்” என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்று பலரும் மதித்த காப்ரியோவின் மறைவு உலக அளவில் பின்வட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.