தவெக மாநாட்டிற்கு சேர் கொடுக்க முடியாது என கூறிய ஒப்பந்ததாரர்.. கேரளாவில் இருந்து வரவழைப்பு..!
Webdunia Tamil August 21, 2025 07:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு மதுரையில் இன்று நடைபெற உள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்து வருகின்றனர். இந்த மாநாட்டிற்கான இருக்கைகளைத் தர முடியாது என ஒப்பந்ததாரர்கள் திடீரென கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், விஜய் அதிரடியாக் கேரளாவில் இருந்து நாற்காலிகளை வரவழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டிற்காக ஒன்றரை லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், ஐந்து ஒப்பந்ததாரர்களிடம் இதற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், திடீரென நான்கு ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் தர முடியாது என கூறியதால், ஒன்றரை லட்சம் நாற்காலிகள் கேரளாவிலிருந்து அவசரமாக கொண்டுவரப்பட்டு, மாநாட்டு திடலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருக்கைகள் தர மறுத்ததற்கு பின்னால் ஏதேனும் அரசியல் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.