ரூ. 10 லட்சம் கடனுக்கு ரூ. 20 லட்சம்…. கந்துவட்டி வசூல் செய்த தம்பதி… மன உளைச்சலால் ஆற்றில் பாய்ந்த பெண்…. தற்கொலை குறிப்பில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!
SeithiSolai Tamil August 21, 2025 10:48 PM

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டுவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 46). இவரது கணவர் பென்னி. அதே பகுதியில் வசிக்கும் பிந்து – பிரதீப் குமார் தம்பதியிடம் ஆஷா ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.

ஆனால், இந்தக் கடனுக்கு கந்துவட்டி முறையில் அந்த தம்பதி ரூ.20 லட்சம் வரை வசூல் செய்ததுடன், கடன் இன்னும் முழுமையாக அடைக்கப்படவில்லை எனக் கூறி ஆஷாவை தொடர்ந்து மிரட்டி வந்தனர். நேற்று இரவும் இருவரும் சேர்ந்து ஆஷாவை மிரட்டியதாகத் தெரிகிறது.

இந்த மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான ஆஷா, நேற்று இரவு கொட்டுவாலி பகுதியில் பாய்ந்தோடும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், இன்று காலை ஆஷாவின் உடலை சடலமாக மீட்டனர்.

மேலும், தனது தற்கொலைக்கு பிந்து – பிரதீப் குமார் தம்பதியே காரணம் என ஆஷா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.