TVK Manaadu: இன்று அனைவரும் மதுரையில் நடக்கும் மாநாட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் யாரும் வர வேண்டாம் என்று வலியுறுத்தியும் சில பேர் குழந்தைகளுடன் அதுவும் கைக் குழந்தைகளுடன் இன்று அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர்.
அதில் சில குழந்தைகள் வெயிலின் தாக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது. இன்னும் சற்று நேரத்தில் மாநாடு ஆரம்பமாக உள்ளது. முதலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு விஜய் மேடைக்கு வந்து ரேம்ப் வாக் செய்து தொண்டர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்துவார். அதன் பிறகே விஜயின் பேச்சு ஆரம்பமாகும். இந்த நிலையில் விஜய் குறித்து சமீபத்தில் நடிகர் டி. ஆரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அவர் கூறியது.
விஜய் என்னுடைய நண்பர். அதுவும் திரையுலக நண்பர். இப்போ நான் எல்லா விஷயத்தையும் சொல்லிடுறேன்.இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் அரசியலுக்காக திரையுலக நண்பர்களை இழக்க தயாராக இல்லை. திரையுலகில் மறைந்த கேப்டன் என்னுடைய நண்பர். அவருக்கு சட்டம் சிரிக்கிறது, கூலிக்காரன் போன்ற படங்களுக்கு நான் தான் மியூஸிக் பண்ணேன்.
இந்த அரசியலால் அதுவும் சில பத்திரிக்கைகள் செய்த கூத்தால் என்னுடைய நட்பும் அவருடைய நட்பும் பிரிந்தது. ஆனால் எங்க ந்ட்பு இரண்டையும் ஒட்டி வைத்தது என்னுடைய மகன் சிலம்பரசன் தான். கேப்டனும் என்னுடைய அப்பாவும் இப்படி இருக்கக் கூடாது என எங்களை இணைக்கும் பாலமாக இருந்தது என்னுடைய பையன் சிலம்பரசன் தான். அன்று என் பையன் சொன்ன காரணத்திற்காக நான் அப்போ ஒரு முடிவு பண்ணேன்.
எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த அரசியல் காரணத்திற்காக என்னுடைய திரையுலகத்தில் இருக்கும் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம். சூப்பர் ஆக்டர் கமல் கூட இருக்கலாம். ஏன் இளைய தளபதி விஜயாக கூட இருக்கலாம். யாராக கூட இருக்கலாம். என்னுடைய கலையுலகில் யாரையும் நான் இழக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.