ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம்... செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் உட்பட பல பொருட்கள் விலை குறைய வாய்ப்பு!
Dinamaalai August 22, 2025 01:48 AM

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி சில பொருட்களுக்கு குறையக்கூடும் என அறிவிப்பு வெளியாகி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற GST கவுன்சில் கூட்டத்தில், 12% மற்றும் 28% வரி விகிதங்களில் இருந்த சில முக்கிய பொருட்களின் வரி குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், செல்போன், நெய், குடை, ஜாம், ஜூஸ் ஆகிய பொருட்களுக்கு இனி வரிகுறைக்கப்படும். இதனையடுத்து இந்த பொருட்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.  

பிரிட்ஜ், ஏசி, சிறிய வகை கார்கள் போன்றவையும் 28% வரியில் இருந்து மீள இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பொருட்களும் விலை குறையும் வாய்ப்புள்ளது.  வரி விகித மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், பல முக்கிய பொருட்களின் விலை குறையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.