ஒடிசா மாநிலம், கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் வெறிநாய் ஒன்று கடித்து திரிந்ததில் குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர். புதன்கிழமை மாலை இந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஷரபா, பாரிகுடா மற்றும் லட்சுமிபூர் கிராமங்களில் நுழைந்த அந்த நாய், பலரைக்கடித்தது. கிராம மக்கள் திரண்டு அதை விரட்டியடித்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அஸ்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தினர். யாருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்று கூறப்படுகிறது.
“நாய் கடித்ததால் எட்டு பேர் மருத்துவமனைக்கு வந்தனர். ஒருவருக்கு உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால், அவர் எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். மற்ற ஏழு பேரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த அனைவரும் ஆண்கள் என்று மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த நயை கண்டறிந்து, மேலும் நோய் பரவாமல் தடுக்க காவல்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Edited by Siva