நம் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
மதுரை பாரபத்தியில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “எம்.ஜி.ஆர் யார் தெரியும்ல? அவர் மாஸ் என்னன்னு தெரியும்ல? அவர் உயிரோட இருந்தவரை, முதல்வர் சீட்டை யாராலயும் அடைய முடியல. எப்படியாவது முதல்வர் சீட்டை எனக்கு கொடுங்க, என் நண்பர் வந்ததும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்னு கெஞ்ச வைத்தவர் எம்.ஜி.ஆர். இன்று எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக் காப்பது யார்? அந்த கட்சி எப்படி இருக்கு? அதை நினைத்து அந்தக் கட்சி தொண்டர்கள் நொந்துபோய் இருக்காங்க. வெளிய சொல்ல முடியாம இருக்காங்க. பாஜகவோட கூட்டணி வைத்திருப்பதால, ஆட்சிக்கு வந்துவிட முடியாது
பெண்கள், பெண் குழந்தைகள், வயதானவர்களின் பாதுகாப்பு தான் நமக்கு முக்கியம். அனைவருக்குமான ஒரு அரசு அமைப்பதே நம் இலக்கு. த.வெ.க அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சியல்ல. கொள்கை, கோட்பாடோடு தொடங்கப்பட்ட கட்சி. நம் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக. இனியாவது மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க கட்சத்தீவை மீட்டுக்கொடுத்துவிடுங்கள் பிரதமர் மோடி அவர்களே, எங்களுக்கு அது போது. நீட் தேர்வு தேவை இல்லை என அறிவித்துவிடுங்கள், அதுபோது. செய்வீர்களா நரேந்திரபாய் தாமோதர மோடிஜி அவர்களே? மோடியின் முரட்டு பிடிவாதத்தால் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மக்களின் கதறல் சத்தம் கேட்கிறதா ஸ்டாலின் அங்கிள்? ஸ்டாலின் அன்கிள்... மக்களை ஏமாற்றுறீங்க, மீனவர்களை ஏமாற்றுறீங்க. பெண்களுக்கு பாதுகாப்பு தருவதா ஏமாற்றுறீங்க. வாட் அன்கிள்? வெரி வெரி வர்ஸ்ட் அங்கிள்” என விமர்சித்தார்.