தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது. கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதே போல் நேற்றும் மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் இந்த வாரம் 3-வது முறையாக இன்று டெல்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. அதாவது, டெல்லியில் உள்ள பிரசாத் நகர் மற்றும் துவாரகா செக்டார் 5 உட்பட 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.