Dhanashree Verma Interview: சாஹலின் டி சர்ட் சர்ச்சை.. சமூக ஊடக ட்ரோலிங்! விவாகரத்துக்கு பின் மனம் திறந்த தனஸ்ரீ!
TV9 Tamil News August 22, 2025 01:48 AM

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் (Yuzvendra Chahal) முன்னாள் மனைவியும் நடன கலைஞருமான தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma), விவகாரத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றி தனது வாழ்க்கை தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதில், தனது திருமணமும் விவகாரத்தும் தன்னை எவ்வாறு ஒரு அடையாளமாக இணைத்தது. சமூக ஊடக ட்ரோலிங், வதந்திகள் மற்றும் ஊகங்களை எதிர்கொண்ட போதிலும், அவர் தைரியத்தை இழக்கவில்லை, மீண்டும் நம்பிக்கையுடன் எழுந்ததாக தெரிவித்தார். மேலும், ஒரு திருமணம் முறிந்தால், யாரையும் அவமதிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல தனஸ்ரீ, தன் வாழ்க்கையில் முன்னேறிச் செல்வது பற்றி யோசித்துக்கொண்டிருந்ததாகவும், மூச்சு விட முயற்சித்ததாகவும், போனை எடுத்தபோதுதான் டி-சர்ட்டைப் பற்றித் தெரிந்ததாகவும் கூறினார்.

என்ன சொன்னார் தனஸ்ரீ வர்மா..?

Yuzvendra Chahal did right #DhanashreeVerma pic.twitter.com/4dgJiectHZ

— Diksha 🌸 (@DikshaYrrr)


யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்தின்போது வழக்கு நடந்த நீதிமன்ற வளாகத்தில் யுஸ்வேந்திர சாஹல் தான் அணிந்திருந்த டி-சர்ட்டில் ‘பி யுவர் சுகர் டாடி’ என எழுதப்பட்டிருந்தது. இதன் பொருள், உனக்கு நீயே எல்லாவற்றையும் வாங்கிக் கொள், உனக்கு நீயே எல்லாவற்றையும் செய்து கொள்’ என்பது ஆகும். இதன்மூலம், சாஹல் தனஸ்ரீ வர்மாவிற்கு எதிராக இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்பட்டது. இது குறித்து தனஸ்ரீ வர்மா ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே நிகழ்ச்சியில் பேசுகையில், “பெண்கள் சிறுவயது முதல் எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்து திருமணத்தை பராமரிக்க விரும்புகிறார்கள்.

ALSO READ: சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு.. அறிமுக போட்டியிலேயே பிரெனலன் சுப்ரியனுக்கு சிக்கல்..!

விவாரகரத்தின்போது நான் பார்த்தேன். அவர் அப்படியான செய்தியுடன் கூடிய டி சர்ட்டை அணிந்திருந்தார். அந்த நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என்று அழ நினைத்தேன். அப்போது, நான் ஏன் அழ வேண்டும் என்று யோசித்தேன். நீ என்னிடம் ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்றால், அதை வாட்ஸ்அப் செய்திருக்கலாம், டி-சர்ட்டை அணிய வேண்டிய அவசியம் என்ன? நான் அங்கே நின்றது இன்னும் நினைவில் இருக்கிறது, தீர்ப்பு வரவிருந்தது. நாங்கள் இருவரும் மனதளவில் நிறைய தயாராகிவிட்டோம், ஆனால் அந்த நேரத்தில் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். நான் எல்லோர் முன்னிலையிலும் சத்தமாக அழ ஆரம்பித்தேன்” என்று தெரிவித்தார்.

மதியுங்கள்:

தொடர்ந்து பேசிய அவர், “அப்போது என் உணர்வுகளை என்னால் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன், சத்தமாகக் கத்தினேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ஆம், இதெல்லாம் நடந்து கொண்டிருந்தது. பின்னர் அவர்தான் முதலில் அங்கிருந்து வெளியேறினார். எனது குடும்ப மதிப்புகளையோ அல்லது அவர்களின் குடும்ப மதிப்புகளையோ நான் காயப்படுத்த விரும்பவில்லை. நான் மரியாதையை பேண வேண்டும். வலியையும் துக்கத்தையும் ஏற்றுக்கொள்வது முக்கியம். ஆனால், நம் பிரிவு ஒவ்வொருக்கொருவரை அவமதிப்பதற்கான ஒரு சாக்காக மாறக்கூடாது” என்று தெரிவித்தார்.

ALSO READ: ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் ? பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்!

தனஸ்ரீ வர்மாவும், யுஸ்வேந்திர சாஹலும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், தனஸ்ரீயும், சாஹலும் 2025ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் பிரிந்ததற்காக காரணம் இதுவரை தெரியவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.