நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். 1983-ல் அவர் இயக்கி நடித்திருந்த 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம் வெளியாகியிருந்தது.
அந்தப் படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார். தன்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்ய டி.ஆர். டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர் பேசுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். என்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.
அதில் முதலாவதாக 'உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். படத்தை செப்டம்பர் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அந்தப் படத்தை தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாகத் தயாரித்திருந்தேன்.
என்னுடைய மனைவி உஷா அந்தப் படத்தின் தயாரிப்பாளர். இப்போது டி.ஆர். டாக்கீஸ் என்ற என்னுடைய புதிய நிறுவனத்தின் மூலமாக என்னுடைய அனைத்துப் படங்களையும் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.
இப்போது ரீ-ரிலீஸில் பல திரைப்படங்கள் சரித்திர சாதனை படைத்து வருகின்றன. நண்பர் ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்த 'கில்லி' திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்திருந்தது. இந்தப் படத்தின் ரீ-மாஸ்டரிங் வேலைகளில் நான் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகிறேன்.
படத்தின் பாடல்கள் அனைத்தையும் புதிதாக நவீனப்படுத்தியிருக்கிறேன். பாடல்களை என்னுடைய டி.ஆர். டிஜி மியூசிக் நிறுவனத்தின் மூலம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் 'ஒண்ணு ரெண்டு மூணு எண்ணிக்கோ, அப்பன் பெயரைச் சொல்லிக்கோ, இந்த வாங்கிக்கோ' என்ற வசனம் பெரிய அளவில் ஹிட்டாகியிருந்தது. இது புதுமையாக அப்போது பேசப்பட்டது. குழந்தைகள் பலரும் இந்த வசனத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.
இதன் தொடர்ச்சியாகத் தான் 'தங்கைக்கோர் கீதம்' படத்தில் 'வாடா என் மச்சி' வசனத்தை வைத்திருந்தேன். அதை 'கவண்' திரைப்படத்தில் இயக்குநர் கே.வி. ஆனந்த் வைத்திருந்தார். பிறகு 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய்யும் அதைப் பேசியிருப்பார்" என்று கூறினார்.
நேற்றைய ‘அஷ்டாவதானி’ டி.ஆர்... இன்றைய ‘அஷ்டாவதானி’ ஏஐ..! - களம் காணத் தயாராகும் ‘தசாவதானி’ கமல்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR