`பாலிவுட்டுக்கும், தென்னிந்திய சினிமாவுக்கும் இதுதான் வித்தியாஷம்' - ஸ்ருதி ஹாசன் சொல்வது என்ன?
Vikatan August 21, 2025 10:48 PM

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'லக்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், 3, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதி ஹாசன்

சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' இந்தியப் பதிப்பகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், " தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு தளத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதற்கான சில விதிமுறைகள் இருக்கும்.

நடிகர், நடிகைகள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள்.

நான் பாலிவுட் திரையுலகில் பணியாற்றியதை ஒப்பிடும்போது தென்னிந்திய திரையுலகில் இந்த விழிப்புணர்வு இருக்கும்.

நிறைய பணம் இருந்தாலும் கூட, தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பலர் ஆடம்பரமாக உடை அணிய மாட்டார்கள்.

ஸ்ருதி ஹாசன்

பல ஆண்டுகளாக பழைய Ambassador கார் வைத்துக்கொண்டு இருப்பார்கள். அது அங்குள்ள மக்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

நாம் வெறும் கலைக்கான கருவி தான் என்பதை புரிந்துகொள்வது மிக முக்கியமான விஷயம்" என்று கூறியிருக்கிறார்.

Shruti Haasan: "இது எனது தனிப்பட்ட விருப்பம்" - பிளாஸ்டிக் சர்ஜரி ட்ரோல்கள் குறித்து ஸ்ருதி ஹாசன்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.