இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் அதிகளவில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க குவிந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், நகரின் மைய பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ளதைத் தொடர்ந்து கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?