Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் அஜித். விஜய்க்கு போட்டி நடிகராக பார்க்கப்பட்டவர் இவர். நடிகர் விஜய்க்கு இருப்பது போலவே இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகர் அஜித்தை அதிமுகவில் இணைக்க முயற்சி எடுத்தார் என்கிற செய்தி ஓடி வருகிறது. பல ஊடகங்களும் இதுபற்றி செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அஜித் மீது இருக்கும் ஜென்டில்மேன் இமேஜ் ஜெயலலிதாவிற்கு பிடித்திருந்தது அதோடு தனக்கு ஒரு மகன் இருந்தால் இப்படித்தான் இருப்பான் என அவர் நினைத்ததாகவும் பல வருடங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. அஜித்தை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஜெயலலிதா விரும்பியது உண்மை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் அஜித்தோ எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என டீசன்டாக மறுத்துவிட்டார் என்கிறார்கள்.
அஜித்தை பிடிக்கும் என்பதால்தான் அவரின் திருமணத்திற்கு ஜெயலலிதா நேரில் போய் வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் இப்போதும் கூகுளில் இருக்கிறது. ‘அஜித் அதிமுகவிற்கு வந்தால் அவருக்கு சரியான பொறுப்பை என்னால் தர முடியும்.. ஆனால் அவர் வர மாட்டார்’ என ஜெயலலிதாவை தனது நெருங்கி வட்டாரங்களில் பேசியதாக செய்திகள் இருக்கிறது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய அதிமுக ஆதரவாளரும் நடிகையுமான வாசுகி ‘அம்மா கடைசியா ஹாஸ்பிடலில் இருந்தப்ப கூட அஜித் தம்பி அரசியலுக்கு வந்திருந்தா இந்நேரம் பொதுச்செயலாளர் ஆகியிருப்பார் அப்படின்னு சொன்னாங்க.. இப்ப மட்டும் அஜித் அரசியல்ல இருந்திருந்தா அவர்தான் முதலமைச்சராக இருந்திருப்பார்.. வேற யாரும் வந்திருக்க முடியாது’ என அவர் பேசியிருக்கிறார்.
துவக்கம் முதலே அரசியலில் ஆர்வம் இல்லாதவராகவே இருந்தார் அஜித். அவரின் ரசிகர்கள் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால்தான் தனது ரசிகர் மன்றங்களையே அவர் கலைத்தார். மேலும் எனது சுயநலத்துக்காக ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் எனவும் அவர் அறிக்கை விட்டார்.
எனவே எந்த காலத்திலும் அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது அதே நேரம் அஜித்துக்கு போட்டி நடிகராக பார்க்கப்பட்ட விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்து விட்டார் 2026. தேர்தலில் அவருக்கு என்ன வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.