Madharasi: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மதராஸி. தொடர் தோல்விக்கு பிறகு தமிழில் முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஹிந்தியில் சல்மான் கானை வைத்து முருகதாஸ் எடுத்த சிக்கந்தர் திரைப்படம் பெரிய அளவு தோல்வியை சந்தித்தது. மும்பையில் சல்மான் கானுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
சிக்கந்தர் தோல்வி சல்மான் கான் ரசிகர்களுக்கு முருகதாஸ் மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் முருகதாஸ் இருக்கிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனுக்கும் இந்தப் படம் வெற்றியை கொடுக்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன் வெளியான அமரன் படத்தின் மாபெரும் வெற்றிதான் காரணம்.
மதராஸி படத்திற்கு அனிருத்தான் இசை. இன்று டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அனிருத் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது ‘இது நானும் சிவகார்த்திகேயனும் 8வது முறை இணையும் படம்’ என்று கூறியிருக்கிறார். மான் கராத்தே, எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் என சிவகார்த்திகேயன் நடித்த இந்த சூப்பர் ஹிட் படங்களுக்கெல்லாம் அனிருத்தான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடலாகும். அந்த வரிசையில் இப்போது மதராஸி படமும் அமைந்துள்ளது. இதை பற்றி அனிருத் பேசும் போது நானும் சிவகார்த்திகேயும் ஒரே நேரத்தில்தான் சினிமா பயணத்தை ஆரம்பித்தோம். மூணு படத்தில்தான் நானும் என்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்தேன். அவரும் அப்போதுதான் ஆரம்பித்தார்.
அதனாலேயே எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவருடைய பெர்ஷனல் கேரக்டர் எனக்கு மிகவும் பிடிக்கும் என அனிருத் கூறியிருக்கிறார்.