இது சங்கீத திருநாளோ..! 100 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா: ஐந்து தலைமுறையை சேர்ந்த, 97 பேரன் பேத்திகள் சேர்ந்து கொண்டாட்டம்..!
Seithipunal Tamil August 25, 2025 08:48 AM

திருப்பூரை சேர்ந்த அன்னபூரணி என்னும் அன்னக்கிளி ஆத்தாள் அவர்களின் நுாறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் குடும்ப சங்கம விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. கே.செட்டிபாளையத்தில் நடந்த இந்த நிகழ்வில் அவரது 13 மகன், மகள்கள் மற்றும் 97 பேரன், பேத்திகள் இணைந்து பிரம்மாண்ட முறையில் கொண்டாடினயுள்ளனர்.

இந்த குடும்ப சங்கம விழாவில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும், திரண்டு ஒன்று சேர்ந்த நிகழ்வு, உறவுகளின் மேன்மையை விளக்குவதாக அமைந்துள்ளது.  அன்னக்கிளி ஆத்தாள் 12 வயதில் கிருஷ்ணசாமி என்பவரை திருமணம் முடித்துள்ளார். இவர்களுக்கு 06 மகன் 07 மகள் என 13 குழந்தைகள் உள்ள நிலையில்,  இவர்கள் மூலம் 05 தலைமுறையை கண்ட பாட்டி தனது, 100-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த விழாவில் அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்து குடும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டு பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றதோடு, பாட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுகுறித்து இந்த 100 வயது பர்த்டே கேர்ள் கூறியதாவது:

இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 05 தலைமுறை பேரன் பேத்திகள் உடன், 100-வது பிறந்தநாள் கொண்டாடுவது தனது பாக்கியம். அந்த காலத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் இந்த காலத்தில் இல்லை. அசைவ உணவை தான் விரும்பி சாப்பிடுவேன். வாரத்தில், 03 நாட்கள் அசைவ உணவு சாப்பிடுவேன். குழந்தைகள் குறித்த கேள்வியை யார் கேட்டாலும் சொல்ல மாட்டேன். 13 குழந்தைகள் என்றால் கண் பட்டுவிடும் என்பதால் அவர் இதனை எப்போதும் சொல்ல மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.