எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் - நயினார் நாகேந்திரன்..!
Top Tamil News August 25, 2025 03:48 PM

திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 

திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறினார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்டிஏ கூட்டணிக்கு வரலாம்  என்றும், 2026 தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்படும்,  அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

“திமுக அரசு வீழ்த்த வேண்டும் எண்ணத்தோடு எம்ஜிஆர் கொள்கையை கடைபிடிப்பவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

எடப்பாடி பழனிசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.