முன்பெல்லாம் வீடுகளில் பெரியவர்கள் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அடிமையாகி, எந்நேரமும் டிவியில் ஏதேனும் ஒரு சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களும், குறிப்பாக ரீல்ஸ் பார்ப்பதும், பதிவிடுவதும் பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளையும் ஆக்கிரமித்து விட்டன. குழந்தைகள் அழுதாலோ, சாப்பிட மறுத்தாலோ, பெற்றோர்கள் அவர்களை சமாதானப்படுத்துவதற்காக ஸ்மார்ட்போனை கொடுத்து விடுகின்றனர்.
இது குழந்தைகளுக்கு பழக்கமாகி, ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போனை அவர்களிடம் இருந்து எடுத்தால், தங்கள் பொக்கிஷத்தை இழந்தது போல பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களும், சமூக வலைதள ரீல்ஸ்களும் மக்களை அடிமையாக்கி வைத்துள்ளன. இந்தப் பிரச்சனையை எடுத்துக்காட்டும் விதமாக, சமூக வலைதளத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு குழந்தை பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு பெண், “நீங்கள் ஏன் பாத்திரம் கழுவுகிறீர்கள்? உங்கள் அம்மா எங்கே?” என்று கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “என் அம்மா போனில் ரீல்ஸ் பார்க்கிறாங்க, அதான் நான் பாத்திரம் கழுவுறேன்” என்று பதிலளிக்கிறது. ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த காணொளி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Kurangugram Ai (@kurangugram)