கடந்த வாரம் கிடு கிடு என உயர்ந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாள் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை, இன்று (ஆக. 25) சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ₹74,440 ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ. 10 குறைந்து ₹9,305 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளி கிராமுக்கு ரூ 1 உயர்ந்து. ரூ 131 விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ. 1000 அதிகரித்து ரூ. 1,31,000- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை மாற்றம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பங்குச் சந்தை அதிர்வுகள், டாலர் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் பொருளாதார எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும் முன் சந்தை நிலவரத்தை சற்று கவனமாக பின்தொடர அறிவுறுத்தப்படுகிறது.