துப்பாக்கிய குடுத்துட்டா நான் தளபதி ஆயிடுவேனா? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
WEBDUNIA TAMIL August 25, 2025 09:48 PM

நேற்று நடந்த மதராஸி பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த தளபதி என சிலர் பேசுவது குறித்து நேரடியாக பதிலளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தயாராகியுள்ள படம் ‘மதராஸி;. இந்த படத்தில் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்துள்ளார், ருக்மிணி வசந்த கதாநாயகியாக நடித்துள்ளார், அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் அதில் ‘துப்பாக்கிய எவன் வெச்சிருந்தாலும் வில்லன் இங்க நான்தான்’ என வசனம் இருந்தது. இது கோட் படத்தில் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்த காட்சியை மையப்படுத்தி வைக்கப்பட்ட வசனம் என பேச்சுகள் எழுந்தது.

இந்நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “கோட் படத்தில் விஜய் சார் என்னிடம் துப்பாக்கியை கொடுக்கும் சீனை வைத்து பலரும் பல விதமாக பேசுகிறார்கள். அந்த சீனை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சினிமாவில் இன்னும் நன்றாக நடித்து மேலும் மேலும் வளருங்கள் என அவர் என்னை வாழ்த்துவதாக பார்க்கிறேன்.

ஆனால் இங்கு பலர் அந்த காட்சியை வைத்து நான் தளபதி ரசிகர்களை ஈர்த்துக் கொள்ள நினைக்கிறேன். குட்டி தளபதி, அந்த தளபதி, இந்த தளபதி என பேசுகிறார்கள். அவர் உயரம் எனக்கு தெரியும். எப்போவுமே அவர் அந்த லெவல் என்றால் நான் இந்த லெவல்தான்.

அவரது பெயரையும், புகழையும் அபகரித்துக் கொள்ள ஆசைப்படுபவன் நான் அல்ல. என்னைப்பற்றி அவருக்கும் தெரியும். அந்த நம்பிக்கையில்தான் அந்த காட்சியில் அவருடன் நான் நடிக்க முடிந்தது” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.