சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்ற நிலையில், காளைகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை கொடிக்காடு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் சிவகங்கை-தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் உள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 18 காளைகளும், 162 வீரர்களும் பங்கேற்றனர்.
காளையை 25 நிமிடத்திற்குள் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டியின்போது காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?