மாணவர்களே... ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்க. சின்ன விஷயம் சமயத்துல உயிருக்கே உலை வைப்பதைப் போல உருமாறி விடக்கூடும். சந்தோஷமாக தினமும் பள்ளி பேருந்தில் பயணித்த மாணவிக்கு அன்றைய தினம் சந்தோஷமாக முடிவடையவில்லை. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கொண்டோட்டியில் தனியாருக்கு சொந்தமான துரக்கல் அல் ஹிடாயத் ஆங்கில வழிப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஃபாத்திமா ஹனியா எனும் மாணவி 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் தினமும் பள்ளி சென்று வந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல் பேருந்தில் பயணித்த போது, அவரது விரல் ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.
வலியில் மாணவி அலறித் துடித்தார். தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேருந்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது கோடங்காடு பகுதியில் வீட்டிற்கு அருகே இறங்குவதற்காக அவர் எழுந்தபோது, அவரது இடது கை மோதிர விரல் ஜன்னல் கம்பியில் உள்ள ஒரு சிறிய துளையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது.
உடனே பேருந்து ஊழியர்கள் ஹனியாவின் கையை விடுவிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. வலியால் துடித்த ஹனியாவின் அலறல் சத்தம் அந்த பகுதியில் இருந்தவர்கள் கூடினார்கள். பேருந்து ஊழியர்களின் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு பேருந்தைக் கொண்டு சென்றனர்.
தீயணைப்பு அதிகாரி இ.கே. அப்துல் சலீம் உடனடியாக துல்லியத்துடனும், வேகத்துடனும் செயல்பட்டார். அவர் உலோகத் தகடு அறுக்கும் கருவியைப் பயன்படுத்தி ஜன்னல் கம்பியை கவனமாக வெட்டி ஹனியாவின் சிக்கிய விரலை விடுவித்தனர். மாணவிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கவனமாக பேருந்து இருக்கையும் அகற்றப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பெரும் போராட்டத்திற்கு பிறகு மாணவியின் கை விரல் விடுவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் ஹனியாவின் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் உடனிருந்தனர். வலியில் அழுத ஹனீபா விரல் விடுவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டதை காண முடிந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?