2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கூட்டணிகள் தீவிரமாகும் சூழலில், திண்டுக்கல்லில் நேற்று இரவு தமமுக சார்பில் ‘சமூக சமத்துவ மாநாடு’சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் அதிமுக மூத்த தலைவர்கள், நயினார் நாகேந்திரன், தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் K.C.திருமாறன் ஜி மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தமமுக தலைவர் ஜான் பாண்டியன், திமுக அரசை கடுமையாக விமர்சித்து, அதிமுக கூட்டணியில் தமமுக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், 2026 தேர்தலில் தென் மாவட்டங்களில் தமமுக போட்டியிடும் என்பதை உறுதி செய்த ஜான் பாண்டியன், சமூக சமத்துவம், பகுத்தறிவு மற்றும் மக்கள் நலக் கோட்பாடுகளை முன்னிறுத்தும் அதிமுக கூட்டணியில் தமது கட்சி இயங்குவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு கூடுதல் வலிமை சேரும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.