சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளியில், ஒரு மெக்கானிக் கார் ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். புதிதாக தார் (டார்) ரோடு போடப்பட்டிருந்தால், அதில் வேகமாக கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார். காரணம், வேகமாக செல்லும்போது தார் காரின் மீது படிந்து ஒட்டிக்கொள்ளும், இது காரின் தோற்றத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கலாம்.
ஒட்டிக்கொண்ட தாரை காரில் இருந்து அகற்றுவது மிகவும் சிரமமான பணியாகும் என்று மெக்கானிக் கூறுகிறார். இதற்கு 8,000 முதல் 10,000 ரூபாய் வரை செலவாகலாம், இது கார் உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். எனவே, புதிய தார் ரோட்டில் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்டுவது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
A post shared by akbar (@azharudin_carwash_madurai)