சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிளாட்பார கடைகள் ஆக்கிரமிப்பு, மெட்ரோ ரயில் பயணிகள் ஆகியவற்றின் காரணமாக தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெவித்துள்ளனர்.
இன்று காலையில் கோயம்பேடு மார்க்கெட் பத்தியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. குறிப்பாக காய்கறி, பூ மற்றும் பழ மார்க்கெட்டுகளுக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்கள் நகர்த்த முடியாமல் அப்படியே நிறுத்தி நின்றனர். இதனால் பொதுமக்கள் மக்கள் கடும் அவதிப்பட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்து கொடுத்தனர்.
இது குறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட் அருகே தினமும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வருகின்ற வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறதோடு, மெட்ரோ பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் முன்பே போக்குவரத்து பிரச்சினை குறித்து தீர்வுகாணவேண்டும் என் வேண்டுகோள் விடுத்துள்ளார்.