ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்கு இல்லை என பாமக பொருளாளர் திலகபாமா கூறியுள்ளார்.
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே நீடித்துவரும் மோதல் போக்கு காரணமாக காட்சியை இரண்டு அணிகளாக பிரிந்த செயல்பட்டு வருகிறது. இருவரும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக பொருளாளர் திலகபாமா, “ராமதாஸ் வேறு அணி, அன்புமணி வேறு அணி என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை. பாமக கூடிய விரைவில் ஒன்றாக இணைந்து ஒரே களம் காணும் என உத்திரவாதமாக கூறுகிறேன். பாமக என்பது ஒன்று தான். ராமதாஸிடம் நல்ல பெயர் எடுக்க பேசி முயற்சி செய்ய வேண்டியதில்லை, கள செயல்பாடுகளை தான் அவர் பார்ப்பார். அன்புமணியின் நடை பயண செயல்பாடுகள் ராமதாஸ் மனதை மாற்றும் என நம்புகிறோம்” என்றார்.