மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் தனது சுயவிவரத்தை திரைத்துறையை சார்ந்த நபர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இந்த சுயவிபரத்தை பார்த்து, நபர் ஒருவர் குறித்த மாணவியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதாவது, அவருக்கு, தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளதோடு, மற்றும் சிலரின் தொடர்பு எண்களை கொடுத்து அவர்களிடம் பேசுமாறு மாணவியிடம் தெரிவித்துள்ளார். கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்த மாணவியும், அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர்கள், நடிப்பதற்கு வாய்ப்பு வேண்டும் என்றால் ரூ.24 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய அந்த கலோரி மாணவி, தனது பெற்றோரிடம் ரூ.24 லட்சம் பணத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர்கள் குறித்த மாணவியின் தொடர்பை துண்டித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத மாணவி பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 02 பேரை கைது செய்து விசாரணை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.