பொதுவாக இன்று செல்போன் பயன்பாடு காரணமாக இரவில் பெரும்பாலானோர் 11மணி 12 மணிக்கு தூங்குவது என்பது வழக்கமாகிவிட்டது .இந்த தூக்கமின்மை என்பது குழந்தைகளுக்கும் இருக்கும் பிரச்சனை. இந்த பிரச்சினையை எந்த உணவின் மூலம் சரி செய்யலாம் என்று பார்க்கலாம்
1.குழந்தைகளுக்கு தயிர் கொடுத்தால் அவர்கள் நன்றாக தூங்க முடியும்,
2.தயிரின் இனிமையான மற்றும் அமைதியான தன்மை அவர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
3.தயிரை ரெகுலராக பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும்
4.மேலும் வாயு காரணமாக வயிற்றில் ஏற்படும் அனைத்து அசௌகரியங்கள் மற்றும் எரிச்சல்கள் குழந்தைக்கு தயிர் கொடுப்பதன் மூலம் குணமாகும்.
5.இது லாக்டிக் அமிலம் காரணமாகும், இது உடலின் அமில-கார சமநிலையை நடுநிலையாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
6.தயிரில் புரதம் , கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்பிற்கு ஊக்கம் அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாய் இருக்கிறது
7. பொதுவாக குழந்தை பருவத்தில் தயிர் போன்ற பால் பொருட்களை உணவில் சேர்ப்பது, அவர்களின் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகிறது.