பொதுவாக சியா விதைகள் முக்கியத்துவம் வாய்ந்தது .இந்த விதைகள் நமக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்க கூடியது ,இது உடல் எடை குறைப்பு முதல் இதய நோய் வரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .இந்த சியா விதைகளில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு சுகர் அளவு அதிகமிருக்கும் .சியா விதைகளை நமது உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
2.சியா விதைகள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும்,
3.சியா விதையில் இருக்கும் மேற்சொன்ன இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் ,நீரிழிவு நோயில் இன்சுலின் உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவும்.
4.அடுத்து சியா விதையில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் பசி தாங்க கூடியதாக இருக்கும், இது அதிகப்படியான உணவு எடுத்துக்கொள்வதை தடுக்கும்.
5.சியா விதைகளில் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
6.சியா விதைகளில்உள்ள சத்துக்கள் ஆரோக்கியமான எலும்பு, தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கும்.
7.சியா விதைகளில் பால் பொருட்களை விட அதிக கால்சியம் உள்ளது.
8.சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம் .
9.சியா விதைகள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
10.உடல் பருமனை குறைக்க மற்ற உணவுகளை காட்டிலும் சியா விதைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.