பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில், கரி கோசி ஆற்றில் தவறி விழுந்த சிறுமியைக் காப்பாற்ற கரையில் இருந்த 4 பேர் ஆற்றில் குதித்த நிலையில், 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் கரி கோசி ஆற்றிற்கு ஒரு குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து சென்றனர். அவர்கள் ஆற்று நீரில் இறங்கிய போது 9 வயது சிறுமி ஆற்றில் தவறி விழுந்து நீரோட்டத்தில் சிக்கி கொண்டார். சிறுமி நீரோட்டத்தில் விழுந்ததைக் கண்ட சிறுமியின் உறவினர்கள் உடனடியாக ஒவ்வொருவராக ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இது போன்று அடுத்தடுத்து சிறுமியைக் காப்பாற்ற 4 பேர் ஆற்றில் குதித்த நிலையில், அவர்கள் அனைவருமே நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் சுலோச்சனா தேவி (30), கவுரி குமாரி (9), சேகர் குமார் (21), கரண் குமார்(21) மற்றும் சச்சின் குமார் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பீகார் மந்திரி லேசி சிங், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?