எதிர்க்கட்சித் தலைவரும்,காங்கிரஸ் தலைவருமான 'ராகுல் காந்தி' பாஜக-வுக்கு எதிராக வாக்கு திருட்டு குற்றச்சாட்டை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.இவரைத் தொடர் பொய்யர் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் ''பட்நாவிஸ்'' கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து பட்நாவிஸ் தெரிவித்ததாவது,"ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் இடைவிடாமல் தொடர்ந்து அடுக்கு அடுக்காக பொய்யை பரப்பி வருகிறார்.
மகாராஷ்டிராவில் இருக்கிற தலைவர்கள், ராகுல் காந்தி உண்மையைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என திடீரென உணர்வதை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது.
பொய்களால் கட்டிய கோட்டை இடிந்து விழுகிறது.மேலும், மக்களின் வாக்குகளை பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே" என்று கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தற்போது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.