பஞ்சாபில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்ஜித் சிங் (வயது 35) என்ற வீரர், போட்டியின் நடுவே சிக்ஸ் ஒன்றை அடித்து, மறுபுறத்தில் இருந்த தனது சக பேட்ஸ்மேனுடன் பேசியபோது திடீரென மாரடைப்பால் நிலை குறைந்து தரையில் விழுந்தார். அருகிலிருந்த நண்பர்கள் உடனடியாக CPR கொடுத்து உயிர்காக்க முயன்றும், அதுவும் பலனளிக்காமல் போனது.
“>
அவர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருமணமான ஹர்ஜித்துக்கு, 8 வயது மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. திடீர் மரணத்தை எதிர்பார்க்க முடியாத சூழலில், அவரது குடும்பம் மற்றும் கிரிக்கெட் அணியினர் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.